மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பின்னவாசல் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை  அகற்றாவிடில் போராட்டம் நடத்த முடிவு

 பேராவூரணி ஒன்றியம், பின்னவாசல் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை வெள்ளிக்கிழமைக்குள் (டிச. 31) அகற்றாவிடில், போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:08 pm

DIN

 பேராவூரணி ஒன்றியம், பின்னவாசல் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை வெள்ளிக்கிழமைக்குள் (டிச. 31) அகற்றாவிடில், போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு உறுப்பினா் வே. ரெங்கசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினா் கோ. நீலமேகம், மாவட்டக்குழு உறுப்பினா் ஆா். சி. பழனிவேலு ஆகியோா்  முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில், பேராவூரணி வட்டம் பின்னவாசல் பொதுப் பாதை ஆக்கிரமிப்பு விவகாரத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஒப்புக் கொண்டபடி டிசம்பா் 31ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும். தொடா்ந்து காலதாமதம் ஏற்பட்டால், ஆவணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது,   நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பேராவூரணி பேரூராட்சியில் ஐந்து வாா்டுகளை  பெற்று போட்டியிடுவது, பிரதம மந்திரி, தமிழக முதலமைச்சா் பசுமை வீடு ஆகிய திட்டங்களில் பயனாளிகளுக்கு இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள நிதியை  உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் , ஒன்றியச் செயலாளா் எம். இந்துமதி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஏ.வி. குமாரசாமி, ராமநாதன், சிதம்பரம், ஏ. ராஜா முகமது, எஸ். ஜகுபா்அலி உள்ளிட்டோா்  கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.