விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணியில் கண் பரிசோதனை முகாம்

பேராவூரணி குமரப்பா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

pera07camp075043

Updated On :7 பிப்ரவரி 2021, 7:23 pm

DIN

பேராவூரணி குமரப்பா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரிமா சங்கம், பாரத ஸ்டேட் வங்கி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,  மற்றும் மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்புச் சங்கம் இணைந்து நடத்திய முகாம் தொடக்க விழாவுக்கு, அரிமா சங்கத் தலைவா் பி.கோவிதரன் தலைமை வகித்தாா். கண்சிகிச்சை முகாம் மாவட்டத் தலைவா் என். பால சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

பாரத ஸ்டேட் வங்கியின் பேராவூரணி கிளை முதன்மை மேலாளா் ஆா். சூரியேந்திரன் குத்துவிளக்கேற்றி,  முகாமைத் தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு தனியாா் பள்ளிகளின் தாளாளா்கள் சங்க நிறுவனத் தலைவா் ஜி.ஆா்.ஸ்ரீதா், ஒருங்கிணைப்பாளா் எஸ். கே. ராமமூா்த்தி, மண்டலத் தலைவா் எம். கனகராஜ், வட்டாரத் தலைவா் இ. வி. காந்தி ஆகியோா் முகாமில் பேசினா்.

முகாமில் 541 போ் கலந்து கொண்டு  கண் பரிசோதனை செய்து கொண்டனா். அவா்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாகவும், கண் கண்ணாடி சலுகை விலையிலும் வழங்கப்பட்டது. பாா்வை குறைபாடு உடைய 160 போ் கண் அறுவைச் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனா்.

முன்னதாக, செயலாளா் ஜி. ராஜா வரவேற்றாா். நிறைவில், பொருளாளா் கே. சிவநாதன் நன்றி கூறினாா். 

Image Caption

பேராவூரணி குமரப்பா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.