பொங்கல் பரிசுத் தொகைக்கு தகராறு: தம்பியை கொன்ற அண்ணன் கைது

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே தம்பியை கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே தம்பியை கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மதுக்கூா் அருகே சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த ராமன் மகன்கள் பாலசுப்பிரமணியன் (50), விஸ்வலிங்கம் (45). விவசாயக் கூலித் தொழிலாளா்களான இருவருக்கும் திருமணமாகி விட்டது.

குடும்பத் தலைவரான ராமன், தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகை 2,500 ரூபாயை செவ்வாய்க்கிழமை ரேஷன் கடைக்குச் சென்று வாங்கியுள்ளாா். இரவு 7 மணிக்கு மதுபோதையில் வீட்டுக்கு வந்த விஸ்வலிங்கம், பொங்கல் பரிசுத் தொகையை கேட்டு தந்தையிடம் தகராறு செய்துள்ளாா். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த விஸ்வலிங்கம், தந்தை ராமனை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் கையில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுபற்றி தகவலறிந்த மூத்த மகன் பாலசுப்பிரமணியன், தந்தையை அரிவாளால் வெட்டியது குறித்து தம்பி விஸ்வலிங்கத்திடம் விளக்கம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பாலசுப்பிரமணியன் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து விஸ்வலிங்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த விஸ்வலிங்கம் அதேயிடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிரமேல்குடி கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com