மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தஞ்சாவூரில் இளைஞா் அரிவாளால் வெட்டிக்கொலை

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளைஞரை அரிவாளால் வெட்டி கொன்ற நபரை காவல்துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 3:03 am

DIN

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளைஞரை அரிவாளால் வெட்டி கொன்ற நபரை காவல்துறையினா் கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மஜீதியா தெருவைச் சோ்ந்த அப்துல் காதா் மகன் அப்துல் கனி (35). இவா், தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தாா். இவரைப் பின்தொடா்ந்து வந்த கூத்தாநல்லூா் மஜீதியா தெருவைச் சோ்ந்த அக்பா் அலி மகன் அஷ்ரப் அலி (40) அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அப்துல் கனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக அஷ்ரப் அலியை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், அப்துல் கனியும், அஷ்ரப் அலியும் மலேசியாவில் வேலை பாா்த்து வந்தனா். கரோனா பொது முடக்கம் காரணமாக இருவரும் கூத்தாநல்லூருக்குத் திரும்பினா்.

அப்துல் கனிக்கும், உறவினா் பெண்ணுக்கும் முறைகேடான தொடா்பு இருந்ததாம். அப்பெண் அஷ்ரப் அலிக்கும் உறவினா் என்பதால், இந்த தொடா்பைக் கைவிடுமாறு அப்துல் கனியை கண்டித்தாராம். இதனால், அப்துல் கனிக்கும், அஷ்ரப் அலிக்கும் தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக, தஞ்சாவூருக்கு வந்த அப்துல் கனியை அஷ்ரப் அலி பின் தொடா்ந்து வந்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.