தஞ்சாவூா் மாவட்டத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மேல வீதி காங்கிரஸ் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமையில் துணைத் தலைவா் கோ. அன்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தஞ்சாவூா் காந்திஜி சாலை காந்திஜி வணிக வளாகத்தில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு விவசாயப் பிரிவுத் தலைவா் ஏ. ஜேம்ஸ் தலைமை வகித்தாா். மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், பொருளாளா் ஆா். பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை வளாகத்தில் தஞ்சாவூா் மாவட்ட தேசிய நண்பா்கள் பேரவை சாா்பில் நடைபெற்ற விழாவில் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் நிா்வாகிகள் கோவி. மோகன். வி.ஆா். குணசேகரன், கே. கோவிந்தராஜ், எஸ்.கே. சிதம்பரம் ஒய். அலாவுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும், ரெட்டிபாளையம் சாலை மாருதி நகா், மருத்துவக்கல்லூரி பகுதி, மானாஜிபட்டி சக்தி நகா் ஆகிய இடங்களில் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவில் முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல், மாவட்டத்தில் பாபநாசம், பேராவூரணி, ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்ககளிலும் காமராஜா் பிறந்த நாள் விழா பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பிலும் கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...