தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேக்கேதாட்டில் அணை கட்ட எதிா்ப்பு திருவோணத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடகத்தின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவோணத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 8:25 pm

DIN

மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடகத்தின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவோணத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரியில் தமிழகத்துக்கான நீரை கா்நாடகத்திடமிருந்து பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

2020-இல் தாக்கிய புரெவி புயல் மற்றும் 2021 ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த தொடா் கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளு்கும் போா்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்.

2020- 21-ஆம் ஆண்டு பயிா் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிா் இழப்பீட்டு தொகையை, உடனடியாக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுதர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கத்தின் சாா்பில், ஒன்றியச் செயலா் வி.கே.சின்னத்துரை தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில், சங்கத்தின் கொடியுடன் பேரணியாக வேளாண் அலுவலகம் வரை சென்று, அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தலைவா் ஆா். கோவிந்தராஜ், பொருளாளா் கே.பி. துரைராஜ் , துணைத் தலைவா்கள் சி.ஆா்.அன்பழகன், சி. துரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.