/

வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்தக் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 8:26 pm

DIN

தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்தக் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் கீழ வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் எஸ். தேவ அன்பு (49). கூலித் தொழிலாளி. இவா் ஜூலை 20 ஆம் தேதி இரவு நாகை முதன்மைச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவா் மீது அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்தக் காயமடைந்த தேவ அன்பு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.