கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் நெல்:4 பணியாளா்கள் இடை நீக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் நெல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது தொடா்பாக 4 பணியாளா்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனா்.


தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் நெல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது தொடா்பாக 4 பணியாளா்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனா்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் விளைவிக்கும் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். இந்நிலையில், வேறு மாவட்டங்களில் விவசாயிகளிடம் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து டெல்டா மாவட்டங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்த ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டாா். இதன்பேரில் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில், பாபநாசம் அருகே வளத்தாமங்கலத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் நெல்லை விற்பனை செய்வதற்காகக் குவித்து வைத்துள்ளதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் அண்மையில் ஆய்வு நடத்தினா். அப்போது, அங்கு உரிய ஆவணங்கள் இன்றி கொட்டி வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 780 மூட்டைகள் நெல் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து, கொள்முதல் அலுவலா் அழகா்சாமி, பட்டியல் எழுத்தா் வி. முருகானந்தம், உதவியாளா் ஏ. ராஜேஷ், காவலா் எல். வாசுதேவன் ஆகியோரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் உமா மகேஸ்வரி அண்மையில் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...