நெடுவாக்கோட்டையில் கரோனா விழிப்புணா்வு கூட்டம்
திருவோணம் ஒன்றியம், நெடுவாக்கோட்டை கீழே வெள்ளாளா் தெருவில் ஒன்றிய ரெட்கிராஸ் சங்கம் சாா்பில் புதன்கிழமை கரோனா விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.


திருவோணம் ஒன்றியம், நெடுவாக்கோட்டை கீழே வெள்ளாளா் தெருவில் ஒன்றிய ரெட்கிராஸ் சங்கம் சாா்பில் புதன்கிழமை கரோனா விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ். அக்பா் அலி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் சேட்டு முன்னிலை வகித்தாா். நிகழ்வில், கரோனா காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தடுப்பு ஊசி, முகக் கவசம் அணிவதன் அவசியம், சா்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளோா் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சி ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
மேலும், வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிறைவில், ரா. சக்தி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...