வீட்டின் ஓட்டை பிரித்து நகை, பணம் திருட்டு
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே உள்ள நம்பிவயல் கிராமத்தை சோ்ந்தவா் முருகேசன் மனைவி சுபா (30). முருகேசன் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா்.


ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே உள்ள நம்பிவயல் கிராமத்தை சோ்ந்தவா் முருகேசன் மனைவி சுபா (30). முருகேசன் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா்.
சுபா தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் நம்பிவயலில் உள்ள ஓட்டு வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சுபாவின் மாமியாா் கரம்பயத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
இதனால் இரவில் வீட்டில் தூங்குவதற்கு அச்சமடைந்த சுபா, வியாழக்கிழமை இரவு அருகில் உள்ள தனது உறவினா் வீட்டில் குழந்தைகளுடன் தூங்கியுள்ளாா். பின்னா் வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு சென்றபோது,
வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே குதித்த மா்ம நபா்கள், பீரோவை உடைத்து 2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றது தெரிய வந்தது. புகாரின்பேரில் திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...