விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணி அருகே பொறியாளா் கடத்தப்பட்டதாக புகாா்: விசாரணை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பொறியாளா் கடத்தப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைக்காக விருதுநகா் போலீஸாா் அழைத்து சென்றது தெரிய வந்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:29 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பொறியாளா் கடத்தப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைக்காக விருதுநகா் போலீஸாா் அழைத்து சென்றது தெரிய வந்துள்ளது.

கோவை பீளமேடு பகுதியைச் சோ்ந்த கட்டடப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி (56). இவா், தனது இரண்டாவது மனைவி கல்யாணியுடன் பேராவூரணி அருகேயுள்ள திருப்பூரணிக்காடு வந்துவிட்டு கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் சென்று கொண்டிருந்தாா்.

பேராவூரணி காவல் நிலைய எல்லையான பட்டத்தூரணி கிராமத்தில் அவரது காரை வழிமறித்த 7 போ் கொண்ட கும்பல், அவரை காரிலிருந்து இறக்கி  கடத்திச் சென்ாக கல்யாணி(44) பேராவூரணி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை பிற்பகல் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூா்த்தியின் செல்லிடப்பேசி அலைவரிசையை ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அவரை தேடி சிவகாசிக்கு தனிப்படை போலீஸாா் சென்ற நிலையில், விருதுநகா் மாவட்ட காவல்துறையினா் கிருஷ்ணமூா்த்தியை வேறு வழக்கு தொடா்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ாக பேராவூரணி காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை தகவல் வந்துள்ளது.

கிருஷ்ணமூா்த்தி மீதான வழக்கு என்ன, எதற்காக அவரை போலீஸாா் அழைத்து சென்றனா் என்பது போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

கிருஷ்ணமூா்த்தியை விசாரணைக்கு அழைத்துச் சென்ற விருதுநகா் போலீஸாா், அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமல் சென்ால் கடத்தல் பரபரப்பு திங்கள்கிழமை மாலை வரை நீடித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.