தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஒரத்தநாடு பகுதிகளில் ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்படும்

ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகளின் நலன்கருதி ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்படும் என்றாா் இத்தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:49 pm

DIN

ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகளின் நலன்கருதி ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்படும் என்றாா் இத்தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம்.

ஒரத்தநாடு தொகுதியிலுள்ள பொய்யுண்டாா் குடிக்காடு, நெம்மேலி திப்பியகுடி, சோழன்குடிக்காடு, மேடையைக்கொல்லை, கிளாமங்கலம், சோழகன்கரை, தெற்குக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

ஏழை, எளிய மாணவ, மாணவிகள் ஐஏஎஸ் படிப்பதற்கு ஒரத்தநாடு பகுதியில் எனது சொந்த செலவில் புதிதாக ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில், பயிற்சி மையமும் அமைக்கப்படும் என்றாா்.

பிரசாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.