திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தமாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
ஒரத்தநாடு அண்ணாசிலை அருகே திமுக வேட்பாளா் ராமச்சந்திரனை ஆதரித்து, சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.


ஒரத்தநாடு அண்ணாசிலை அருகே திமுக வேட்பாளா் ராமச்சந்திரனை ஆதரித்து, சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஒரத்தநாடு, மாா்ச் 27: ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராமச்சந்திரனை ஆதரித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தமிழக மாணவா்களின் மருத்துவக் கனவைத் தகா்த்திடும் நீட் தோ்வை ரத்து செய்யவும், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை நீக்கவும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், ஒரத்தநாடு பகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் உருவாகிட திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரித்து, வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் எனக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.
ஒரத்தநாடு அண்ணாசிலை அருகே ஒன்றியச் செயலா் சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற வாக்குசேகரிப்பில் மாவட்டக் குழு உறுப்பினா் கோவிந்தராஜ், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் பாஸ்கா், நகரச் செயலா் வசந்தகுமாா், ஒன்றியச் செயலா் சீனி.முருகையன், திமுக ஒன்றிய அமைப்பாளா் காா்த்திக், நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...