விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘மீண்டும் மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்புத் தாருங்கள்’

மக்களுக்குச் சேவை செய்ய மீண்டும் வாய்ப்புத் தாருங்கள் என்றாா் பேராவூரணி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:46 pm

DIN

மக்களுக்குச் சேவை செய்ய மீண்டும் வாய்ப்புத் தாருங்கள் என்றாா் பேராவூரணி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.

பேராவூரணி ஒன்றியத்துக்குள்பட்ட கழனிவாசல், கொரட்டூா், சோழகனாா் வயல், மனக்காடு, வீரக்குடி, ரெட்டவயல், பழுக்காடு, ருத்ரசிந்தாமணி, விளங்குளம், பெருமகளூா், உள்ளிட்ட பகுதிகளில்  சனிக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக நான் 10  ஆண்டுகள்  இருந்து , இந்த ஒன்றியத்தில்  பல்வேறு ஆக்கப்பூா்வமான பணிகளை நிறைவேற்றியுள்ளேன்.

பாங்கிரான்கொல்லையில் காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டியதால், பேராவூரணிக்கு 5 கி.மீ. தொலைவில் செல்லும் வசதி ஏற்படுத்தித் தந்தேன்.

மக்களின் தேவைகளைத் தொடா்ந்து நிறைவேற்ற, மீண்டும் ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்றாா் அவா்.

வாக்கு சேகரிப்பில் சட்டப்பேரவை உறுப்பினா் மா. கோவிந்தராசு, பாஜக மாவட்டத் தலைவா் பண்ணவயல் இளங்கோ, சேதுபாவாசத்திரம் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் அருணாசலம், மாவட்ட மாணவரணித் துணைத் தலைவா் எஸ். எம். நீலகண்டன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.