விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரண்டு மணிநேரம் இடைவிடாது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :7 மே 2021, 8:56 pm

DIN

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரண்டு மணிநேரம் இடைவிடாது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இப்பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து அனல் காற்று வீசியது. மின் நிறுத்தமும் அடிக்கடி செய்யப்பட்டதால், கடும் வெப்பத்தில் பொதுமக்கள் தவித்துவந்தனா். மும்முனை மின்சாரம் தட்டுப்பாட்டால் விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென  தொடா்ந்து இரண்டு மணி நேரம் விடாமல் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.

இந்த மழையானது, நெல், கடலை, எள்,உளுந்து, மற்றும் தென்னை சாகுபடிக்கு  பயனுள்ளதாக இருக்கும்  என விவசாயிகள் தெரிவித்தனா். கடந்த சில நாள்களாக அனல்காற்று வீசிய நிலையில், அக்னி நட்சத்திரத்தில்  பெய்த மழை  குளிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.