விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குடியிருப்புப் பகுதியில் பெண் சடலத்துடன் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதால் மறியல்

பேராவூரணியில் குடியிருப்பு பகுதியில் பெண்  சடலத்துடன் வெள்ளிக்கிழமை  ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 மே 2021, 8:00 pm

DIN

பேராவூரணியில் குடியிருப்பு பகுதியில் பெண்  சடலத்துடன் வெள்ளிக்கிழமை  ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். 

 பேராவூரணி பழைய பேருந்து நிலையம் பின்புறம், ரயில்வே லைன் கிழக்குத் தெருவில் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். 

இந்நிலையில், அப்பகுதியில் பெண் சடலத்துடன் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஆளில்லாமல் நிறுத்தப்பட்டிருந்தது. அது கரோனாவால் இறந்தவரின் சடலம் என வதந்தி பரவியதால் , அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திரண்டு பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். 

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த பகுதியில் வசித்த இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த பெண், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதயநோய் காரணமாக இறந்துவிட்டதாகவும், கரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் ரமலான் பண்டிகை என்பதால் காலனி வீட்டில்  வசிக்கும் அவரது வீட்டுக்கு சடலத்தை  கொண்டு சென்றால், மற்றவா்களுக்கு  சங்கடம் ஏற்படும் என நினைத்த உறவினா்கள், அவரை அடக்கம் செய்வதற்காக, அடக்க ஸ்தலத்திற்கு  குழிவெட்ட, மற்ற பொருள்கள் வாங்க  ஆம்புலன்ஸை  குடியிருப்புப் பகுதிக்கு சற்று தள்ளி ஓரமாக  நிறுத்திவிட்டு சென்றது  தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாரின் அறிவுறுத்தலையடுத்து, சடலம் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து  கொண்டு செல்லப்பட்டு பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

‘சடலங்களை எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் இந்தப் பகுதியில் வைத்து கழுவப்படுகின்றன. ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் அங்கேயே அமா்ந்து மது அருந்துகின்றனா். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறினா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததை தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். தொடா்ந்து அப்பகுதியில் பிளீச்சிங் பவுடா், கிருமிநாசினி தெளிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.