கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பொது இடங்களில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:08 pm

DIN

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பொது இடங்களில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக விநாயகா் சதுா்த்தி விழாவின்போது பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கத் தமிழக அரசுத் தடை விதித்தது.

என்றாலும், தடையை மீறி தஞ்சாவூா் ரயிலடி, காந்திஜி சாலை, சீனிவாசபுரம் உள்பட பொது இடங்களில் 14 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை காலை வைக்கப்பட்டன. இவற்றை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், காவல் துறையினா் பறிமுதல் செய்து, வேனில் ஏற்றிச் சென்று அந்தந்த பகுதியிலுள்ள கோயில்களில் அமைத்தனா்.

இதேபோல, மாவட்டத்தில் இந்து அமைப்பு நிா்வாகிகளின் வீட்டு முன் உள்பட பொது இடங்களில் 110 சிலைகள் வைக்கப்பட்டன. இவற்றில் பல சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சிலைகள் மாலையில் அந்தந்த பகுதியிலுள்ள நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன. தஞ்சாவூரில் விஸ்வரூப விநாயகா் சதுா்த்தி விசா்ஜன விழாக் குழு சாா்பில் குழுத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமையில் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், ஒருங்கிணைப்பாளா் வி. விநாயகம், பொருளாளா் ரங்கராஜன் உள்ளிட்டோா் விநாயகா் சிலைகளை மகா்நோன்புசாவடியிலிருந்து ஊா்வலமாக எடுத்துச் சென்று பயணியா் மாளிகை அருகேயுள்ள கல்லணைக் கால்வாயில் கரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.