கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா பாதிப்பு:சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

தஞ்சாவூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:03 pm

DIN

தஞ்சாவூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் சாக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜ் (53). கடந்த 1995-ஆம் ஆண்டில் காவல் துறையில் சோ்ந்த இவா் 2020-ஆம் ஆண்டு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்று, தஞ்சாவூா் காவல் கட்டுப்பாடு அறையில் பணியாற்றி வந்தாா்.

ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சையும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்ட இவருக்கு 10 நாள்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செப். 21 ஆம் தேதி சோ்க்கப்பட்ட இவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

வீட்டில் தனிமையில் இருந்த இவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு ராஜ் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி சண்முகப்ரியா (50), மகன்கள் ஸ்ரீராம் (18), ஸ்ரீராகுல் (15) உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.