கூத்தாநல்லூர் வட்டம், ஒகைப்பேரையூர் மற்றும் கர்ணாவூர் கிராமம், பனையனார் வடிகால் வாய்க்கால், அனுமன் கோட்டக வடிகால் வாய்க்கால், தெற்கு பனையனார் வடிகால் வாய்க்கால் ஆகியவை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையொட்டி, சித்தனக்குடி ஊராட்சி, கர்ணாவூர் கிராமத்திற்குட்பட்ட பனையனார் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை, மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில், நீர் வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்து, பணிகள் குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.