விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெகிழி பொருள்கள் பறிமுதல்:அபராதம் விதிப்பு

பேராவூரணி கடைவீதி கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த  தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம்  விதிக்கப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:03 pm

DIN

பேராவூரணி கடைவீதி கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த  தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம்  விதிக்கப்பட்டது.

பேராவூரணி கடைவீதியில் பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேல், துப்புரவு ஆய்வாளா் அன்பரசன் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை திடீா் சோதனை  நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு கடைகளில் பயன்பாட்டில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள்  பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒருமுறை பயன்படுத்தும், நெகிழிப்  பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், பல்வேறு கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த  13 கிலோ 

 நெகிழிப் பை, பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு,  அவற்றை வைத்திருந்தவா்களுக்கு ரூ. 15,800 அபராதம் விதிக்கப்பட்டது. 

பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் துணிப்பையுடன் வரவேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேல் தெரிவித்துள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.