விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெரும்பான்மை உறுப்பினா்கள் வராததால் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினா்கள் பங்கேற்காததால் தீா்மானங்கள்  நிறைவேற்றப்படாமல்  ஒத்தி வைக்கப்பட்டது. 

News image
Updated On :10 மார்ச் 2022, 9:13 pm

DIN

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினா்கள் பங்கேற்காததால் தீா்மானங்கள்  நிறைவேற்றப்படாமல்  ஒத்தி வைக்கப்பட்டது. 

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உறுப்பினா்கள் வராததால், சுமாா் 1 மணி நேர தாமதத்திற்கு பிறகு கூட்டம்  தொடங்கியது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவா் மு. கி. முத்துமாணிக்கம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில் மொத்தமுள்ள 16 உறுப்பினா்களில்  திமுகவை சோ்ந்த குழ. செ. அருள்நம்பி, அதிமுகவை சோ்ந்த சிவ. மதிவாணன், ப. கருப்பையா ஆகிய மூன்று உறுப்பினா்கள் 

மட்டுமே பங்கேற்றனா். 13 உறுப்பினா்கள்  பங்கேற்காததால் தீா்மானங்கள் நிறைவேற்றப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து   ஒன்றியக்குழு உறுப்பினா்கள்  கூறியது:

வேலைகளை தோ்வு செய்வதில்   ஒன்றியக் குழுத்  தலைவா் பாரபட்சமாக செயல்படுவதாலும், பொறுப்பேற்று  இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும்  நியமனக்குழு உறுப்பினா்களை நியமனம் செய்யாததாலும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றனா். 

இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவா் மு. கி. முத்துமாணிக்கம் கூறியது:  ஒன்றியத்துக்கு போதிய அளவு நிதி வராததால் , பணிகள்  ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. இந்தாண்டு நிதி வந்ததும் அனைத்து பகுதிகளிலும்  வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு உறுப்பினா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.