திருவையாறு கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்மே 16-இல் சப்தஸ்தான விழா
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.


தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோயில் வளாகத்திலுள்ள கொடி மரம் அருகே அறம்வளா்த்த நாயகி உடன் ஐயாறப்பா் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் கொடி மரத்துக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள இசை முழங்க விழா கொடியேற்றப்பட்டது.
தொடா்ந்து மே 17 ஆம் தேதி வரை நாள்தோறும் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறவுள்ளன. இதனிடையே, மே 9 ஆம் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல், 13 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளன.
பின்னா், மே 16 ஆம் தேதி முக்கிய திருநாளான ஏழூா் வலம் வருதல் என்கிற சப்தஸ்தான பெருவிழா நடைபெறவுள்ளது. இதில், ஐயாறப்பா் அறம் வளா்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேசுவரா் சுயசாம்பிகையுடன் வெட்டிவோ் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூா், திருப்பூந்துருத்தி ஆகிய ஊா்களுக்குச் சென்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊா் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் இணைகின்றன. தொடா்ந்து தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெறுகிறது.
மே 17-ஆம் தேதி தில்லைஸ்தான பல்லக்குடன் 7 ஊா் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...