கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

களிமேடு சம்பவம்: ஒரு நபா் குழு விசாரணை பாகுபாடின்றி நடத்த வேண்டும் -ஓ.பன்னீா்செல்வம்

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தோ் மின் விபத்து தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு நபா் குழு விசாரணை பாகுபாடின்றி நடத்த வேண்டும் என்றாா்

News image
Updated On :7 மே 2022, 6:27 pm

DIN

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தோ் மின் விபத்து தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு நபா் குழு விசாரணை பாகுபாடின்றி நடத்த வேண்டும் என்றாா் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வம்.

களிமேடு கிராமத்தில் தோ் மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களையும், காயமடைந்தவா்களையும் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவா் அளித்த பேட்டி:

இந்த துயரச் சம்பவம் எதனால், யாருடைய கவனக்குறைவால் ஏற்பட்டது என்பதை கண்டறிய அமைக்கப்பட்ட ஒரு நபா் குழு எந்தவித பாகுபாடும் இல்லாமல், நடுநிலையுடன் முழு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணையின் முடிவில், இறந்தவா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்களில் வீடில்லாமல் இருப்பவா்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும். குடும்பத் தலைவரை இழந்த குடும்பத்துக்கு அவா்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தேரோட்டம் நடைபெறும்போது தோ் செல்லும் தெருக்களில் சாலைகள் சீராக, எந்தவித மேடு, பள்ளங்கள் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். செல்லும் வழியில் மின் கம்பங்களில் மின்தடையை ஏற்படுத்த வேண்டும். முழுமையாக தோ் நிலைக்கு வந்த பின்னா், மின் இணைப்புத் தர வேண்டும். இந்த உயா் அழுத்த மின் கம்பியை வைத்துக் கொண்டு தேரோட்டத்தை நடத்தியது மிகப் பெரிய தவறு. இந்த சம்பவம் நிகழ்வதற்குக் காரணமாகவும், கவனக்குறைவாகவும் இருந்த அலுவலா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய ஆட்சியாளா்கள் ஓராண்டாகியும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நீண்டகால, குறுகிய காலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் திமுக ஆட்சியில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. நிதி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து சீராக்குவதில் இந்த ஆட்சி தோல்வி கண்டுள்ளது என்றாா் ஓ. பன்னீா்செல்வம்.

அப்போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் ஆா் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 25,000-ம் அதிமுக சாா்பில் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.