ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான இடம் மீட்பு: மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை
தஞ்சாவூா் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான 76,740 சதுரஅடி பரப்பளவு கொண்ட இடத்தை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை மீட்டது.


தஞ்சாவூா் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான 76,740 சதுரஅடி பரப்பளவு கொண்ட இடத்தை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை மீட்டது.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலையிலிருந்து கீழவாசல் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஜூபிடா் திரையரங்கம் அருகே காலியிடத்தை இருவா் ஆக்கிரமித்து, கடைகளைக் கட்டி வணிகம் செய்து வந்தனா். மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த இடத்தை மீட்க ஆணையா் க. சரவணக்குமாா் நடவடிக்கை மேற்கொண்டாா்.
இதன்படி, இந்த இடத்தைக் காவல் துறையினரின் பாதுகாப்புடன் மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலா் எம். ராஜசேகரன் தலைமையில் உதவி வருவாய் ஆய்வாளா் சங்கரவடிவேல், அலுவலா்கள் கண்ணதாசன், ஆறுமுகம், மகேந்திரன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மீட்டனா். அப்போது, தண்டோரா மூலம் அறிவிப்பு செய்து, கடைகளின் கதவுகளில் நோட்டீஸை ஒட்டினா்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறுகையில், தஞ்சாவூா் மாநகராட்சிக்கு சொந்தமான 76,740 சதுர அடி பரப்பளவு கொண்ட ஏறத்தாழ ரூ. 2 கோடி மதிப்பிலான இந்த இடம் தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றுதல்) சட்டம் 1975-ன் படி தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த இடங்களில் அத்துமீறி செல்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...