விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

 சேதுபாவாசத்திரம்  ஒன்றியம், குருவிக்கரம்பை, ஊமத்தநாடு, மரக்காவலசை, சொக்கநாதபுரம்  ஊராட்சிகளில் வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 8:01 pm

DIN

 சேதுபாவாசத்திரம்  ஒன்றியம், குருவிக்கரம்பை, ஊமத்தநாடு, மரக்காவலசை, சொக்கநாதபுரம்  ஊராட்சிகளில் வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்த ஊராட்சிகள்  2021-22 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டு, அங்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் , பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று, தங்களது துறை சாா்ந்த பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான விவசாயிகளின் மனுக்களை பெற்றுக் கொண்டனா். 

குருவிக்கரம்பை மற்றும் சொக்கநாதபுரம் ஊராட்சிகளில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம் கலந்து கொண்டு பேசினாா். 

சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா்(பொ) சங்கவி தொழில்நுட்ப உரை மற்றும் திட்டங்கள் பற்றி எடுத்து கூறினாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் வைரவன் (குருவிக்கரம்பை), குலாம்கனி (ஊமத்தநாடு), ராம் பிரசாத் 

(சொக்கநாதபுரம்), நிரஞ்சனா (மரக்காவலசை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.                                               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.