கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொகுப்பூதிய செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, உலக செவிலியா் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :12 மே 2022, 8:09 pm

DIN

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, உலக செவிலியா் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் அரசு இராசா மிராசுதாா் மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நைட்டிங்கேல் அம்மையாரின் படத்துக்கு மாலை அணிவித்த செவிலியா்கள், மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கே. வளா்மதி தெரிவித்தது:

கரோனா நோய்த் தொற்றுக்காலத்தில் இறந்த செவிலியா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, அவா்களது குடும்பத்தை கௌரவப்படுத்த வேண்டும். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இதுவரை தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

உயிரை துச்சமென நினைத்து கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியா்களுக்கு மீண்டும் அரசுப் பணி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

செவிலியா் கண்காணிப்பாளா் எஸ். கலைமணி தலைமையில் நடைபெற்ற

விழாவில் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாவட்டச் செயலா் என். சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.