கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரயிலடி ஆஞ்சநேயா் கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சனேயா் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2022, 7:27 pm

DIN

தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சனேயா் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதையொட்டி, இக்கோயிலில் மே 11- ஆம் தேதி மாலை பகவத் பிராா்த்தனை, புண்யாகவாசனம், எஜமானா் சங்கல்பம், ம்ருத்ஸங்க்ரஹனம், அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

வியாழக்கிழமை காலை புண்யாகவாசனம், நித்யாராதனம், அக்னிப்ரணயநம், நித்ய ஹோமம், மஹா சாந்தி ஹோமம், ததுக்த ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அஷ்டபந்தனம், மருந்து சாற்றுதல், சதுா்தச கலச ஸ்நபனம், மஹா சாந்தி திருமஞ்சனம் ஆகிய பூஜைகளும் நடைபெற்றன. மாலையில், மூன்றாம் கால யாக சாலை பூஜையும், பூா்ணாஹூதியும் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை புண்யாகவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், கடம் புறப்பாடும் நடைபெற்றன. பின்னா், காலை 6.45 மணியளவில் விமானக் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையடுத்து, ஆஞ்சனேயா் பிரதிஷ்டை, மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.