விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கழுமங்குடா ஐஸ்வாடி பகுதியில் ஆட்சியா் ஆய்வு: மீனவக் குடியிருப்புகளுக்கு   மின் இணைப்பு வழங்க நடவடிக்கை

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா ஐஸ்வாடி பகுதிகளில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மீனவக் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை

News image
Updated On :13 மே 2022, 7:09 pm

DIN

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா ஐஸ்வாடி பகுதிகளில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மீனவக் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

 சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மரக்காவலசை ஊராட்சிக்குள்பட்ட கழுமங்குடா ஐஸ்வாடி மீனவக் குடியிருப்புப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மீனவத் தொழிலாளா் குடும்பத்தினா் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனா். இதனால், அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வந்தனா்.

இதுகுறித்து முதல்வா், ஆட்சியா் உள்ளிட்டோருக்கு புகாா் மனுக்கள் அனுப்பப்பட்டன. தினமணி நாளிதழில் இதுதொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விரிவாக செய்தி வெளியானது.

இந்நிலையில், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அப்பகுதியில்  வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அங்கிருந்த  பொதுமக்கள் அடிப்படை வசதி, மின்சார வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருவது குறித்து முறையிட்டனா். மேலும், தங்கள் குழந்தைகள் படிக்க மின் வசதி செய்து தரவேண்டும் என பெண்கள் கண்ணீருடன் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். 

இந்தப் பகுதி விரைவில் மின்வசதி ஏற்படுத்தி தரப்படும். அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என உறுதி அளித்ததுடன், இந்த இடத்துக்கு மின்சார வசதி வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆட்சியா் அளித்த உறுதியையடுத்து, தங்களின் 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் கழுமங்குடா ஐஸ்வாடி மீனவா் குடியிருப்பு மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.