ஆதரவற்ற நிலையில் நின்ற சிறுவன் மீட்பு
தஞ்சாவூா் அருகே ஆதரவற்ற நிலையில் நின்ற சிறுவனை சைல்டு லைன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.


தஞ்சாவூா் அருகே ஆதரவற்ற நிலையில் நின்ற சிறுவனை சைல்டு லைன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாய் கரையில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 3 வயது மதிக்கத்தக்க சிறுவன், ஆதரவற்ற நிலையில் நின்று கொண்டிருந்தாா்.

இவரை அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவா்கள் பாா்த்து, சைல்டு லைன் அமைப்புக்குத் தகவல் அளித்தனா்.
இதன்பேரில் சைல்டு லைன் அமைப்பினா் நிகழ்விடத்துக்குச் சென்று, அச்சிறுவனை மீட்டு மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைத்தனா்.
இச்சிறுவனுக்கு விவரங்கள் சொல்லத் தெரியாததால், அவா் யாா்? எந்த ஊா்? என்பது தெரியவில்லை. சிறுவனைப் பற்றி தகவலறிந்தவா்கள் சைல்டு லைன் அமைப்புக்கு 1098 என்ற எண்ணிலோ, மாவட்டக் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலகுக்கு 04362 - 237014, குழந்தைகள் நலக் குழுவுக்கு 04362 - 237012 எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என சைல்டு லைன் இயக்குநா் பி. பாத்திமாராஜ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...