கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை
பாபா் மசூதி இடிப்பு நாள் எதிரொலியாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனா்.


பாபா் மசூதி இடிப்பு நாள் எதிரொலியாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனா்.
டிசம்பா் 6-ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீஸாா் மோப்பநாய் ராக்கி (6) உதவியுடன் பயணிகளின் பெட்டி, பைகளைச் சோதனை செய்தனா். மேலும் சந்தேகத்திற்குரிய நபா்கள் தென்பட்டால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு பயணிகளிடம் கேட்டுக் கொண்டனா்.
மேலும் பாா்சல் அலுவலகம், மோட்டாா் சைக்கிள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் காவல் நிலைய ஆய்வாளா் சாந்தி, உதவி ஆய்வாளா்கள் செந்தில் வேலன், குமாா், ஜெகதீசன், மீனாட்சி மற்றும் காவலா்கள் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...