

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தஞ்சாவூரிலுள்ள கோயில்களில் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாருக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலா்களால் மலா் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், அதிகாலை முதல் பக்தா்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால், பக்தா்கள் நீண்ட வரிசையில் பெருவுடையாா், பெரியநாயகி அம்மனை வழிபட்டனா். இதேபோல, புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.
மேலும், தஞ்சாவூா் பூக்காரத் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில், மேல வீதி சங்கரநாராயணா் கோயில், கொங்கணேசுவரா் கோயில், மூலை அனுமாா் கோயில், கீழவாசல் வெள்ளை பிள்ளையாா் கோயில், காளியம்மன் கோயில், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்மா் கோயில், கரந்தை கோடியம்மன் கோயில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீசுவரா் கோயில், வடவாறு பிருந்தாவனத்திலுள்ள ராகவேந்திரா் மடம் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரா் கோயிலில் கஜலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.