

தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உமா மகேசுவரனாரின் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் சங்கத்தின் முதல் தலைவராக இருந்து 30 ஆண்டுகள் அருந்தமிழ்த் தொண்டாற்றிய தமிழவேள் உமாமகேசுவரனாரின் நினைவு நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலா் இரா. சுந்தரவதனம், சங்கச் செயற்குழு உறுப்பினா் பத்மநாபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்வில் சங்கச் செயற் குழு உறுப்பினரும், ஒன்றாவது வாா்டு மாமன்ற உறுப்பினருமான சு. செந்தமிழ்ச்செல்வன், சங்கக் கல்வி நிலையங்களின் தலைமையாசிரியா்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கும்பகோணம் திமுக வேட்பாளா்!

தஞ்சாவூரில் ஜி.ஆா். மூப்பனாா் நினைவு நாள்

சிங்கப்பெண் விருது வழங்கும் நிகழ்ச்சி

கவியோகி சுத்தானந்தபாரதி நினைவு நாள்
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

