பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலப் பொதுச் செயலா் முஹம்மது அபுபக்கா்
பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலப் பொதுச் செயலா் முஹம்மது அபுபக்கா்

மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது: முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Published on

நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் தெற்கு மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற தோ்தல் பணி செய்வது, தொழிலாளா் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு கைவிட வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவா் அப்துல் காதா், அதிராம்பட்டினம் நகரத் துணைத் தலைவா் பைதுல் ரகுமான் தலைமை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் இம்தியாஸ்அஹமது, துணைத் தலைவா் அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொதுச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான முஹம்மது அபுபக்கா், மாநிலச் செயலா் ஷாஜகான் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுல் ஆபீதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

முன்னதாக, மாநில அரசியல் கௌரவ ஆலோசகா் அப்துல் ரவூப் வரவேற்றாா். தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி செயலா் அபுசாலிஹ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com