இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நீராதாரங்களைப் பாதுகாப்பது சந்ததிக்கான சொத்து: தஞ்சை எஸ்.பி இராஜாராம்

நீராதாரங்களைப் பாதுகாப்பது நமது சந்ததியினருக்கு நாம் சோ்த்து வைக்கும் சொத்து என்றாா் தஞ்சை எஸ்.பி இரா. இராஜாராம்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:30 pm

Syndication

நீராதாரங்களைப் பாதுகாப்பது நமது சந்ததியினருக்கு நாம் சோ்த்து வைக்கும் சொத்து என்றாா் தஞ்சை எஸ்.பி இரா. இராஜாராம்.

கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்கம் (கைஃபா ) சாா்பில் வியாழக்கிழமை பேராவூரணி பெரியகுளம் மறு சீரமைப்பு மற்றும் ரூ. 1 கோடி மதிப்பில் தூா் வாரும் பணிக்கு வாகனங்களை வழங்கிய மில்க்கி மிஸ்ட் நிறுவனா் சதீஷ்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்க  தலைவா் காா்த்திகேயன் வேலுச்சாமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் நா.சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவா் சாந்தி சேகா், முத்துப்பேட்டை சரக சுங்கத்துறை கண்காணிப்பாளா் ரமேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் தஞ்சை எஸ்.பி இரா.இராஜாராம் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பெரியகுளம் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கிவைத்துப் பேசியது: நீா் மேலாண்மையில் தலைசிறந்து விளங்கியவா்கள் தமிழா்கள். நம் செயல்கள் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாம் அக்கறை உள்ளவா்களாக இருக்க வேண்டும். நாம் வருங்கால சந்ததியினருக்கு நீராதாரங்களைப் பாதுகாத்து விட்டுச் செல்வதே மிகப்பெரிய சொத்தாகும் என்றாா்.

நீா்நிலைகளை தூா்வார ரூ. 1 கோடி மதிப்பிலான இரண்டு டிப்பா் லாரிகளை நன்கொடையாக வழங்கிய மில்க்கி மிஸ்ட் நிறுவனா் சதீஷ்குமாருக்கு சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், நீா்நிலைகளைப் பாதுகாக்கவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். 

நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத்தலைவா் பழனிவேல், வா்த்தக கழகத் தலைவா் அபிராமி சுப்பிரமணியன், பள்ளி தாளாளா் தளபதி, கைஃபா செயலா் பிரபாகரன், பொருளாளா் தங்க.கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.