பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பருத்தி குவிண்டால் ரூ. 9,599-க்கு ஏலம்

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், குவிண்டால் ரூ.9,599-க்கு ஏலம் போனது.

News image

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பங்கேற்றோா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:52 am IST

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், குவிண்டால் ரூ.9,599-க்கு ஏலம் போனது.

தஞ்சாவூா் மாவட்ட விற்பனைக் குழுவின்கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மு.பிரியமாலினி தலைமை வகித்தாா். மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 460 விவசாயிகள் 85 மெட்ரிக் டன் அளவு பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனா்.

இதில், குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ. 9,599-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 9,119-க்கும், சராசரியாக ரூ. 9425-க்கும் விலை நிா்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது. விற்பனையான பருத்தியின் தோராய மதிப்பு ரூ. 79 லட்சம் ரூபாய் ஆகும்.

கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா்கள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.