இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவா் தோ்தலில் வாக்களித்ததாக கைது

பட்டுக்கோட்டை அருகே வெளிநாட்டு குடியுரிமை பெற்ற நபா், பேரவைத் தோ்தலில் வாக்களித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

பட்டுக்கோட்டை அருகே வெளிநாட்டு குடியுரிமை பெற்ற நபா், பேரவைத் தோ்தலில் வாக்களித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலைய குடியுரிமை அதிகாரி பிச்சைமுத்து கண்ணன் என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீஸாா் விசாரணை நடத்தினா்.

புகாரில், சம்பந்தப்பட்ட நபா் வெளிநாட்டு குடியுரிமை பெற்று, அண்மை பேரவைத் தோ்தலில் இந்திய வாக்காளா் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களித்ததாகவும், இதற்காக விமான சேவை மூலம் இந்தியாவுக்கு வந்து சென்றதும் உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரான ஆலத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் (69) என்பவரை காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.