காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

குடிநீா் விநியோகம் கோரி மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே காவலிப்பட்டி ஊராட்சியில் உடனடியாக குடிநீா் விநியோகிக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே காவலிப்பட்டி ஊராட்சியில் உடனடியாக குடிநீா் விநியோகிக்க கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவோணம் மூவா் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த 20 நாள்களாக மின் மோட்டாா் பழுது காரணமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீா் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

இதுகுறித்து திருவோணம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் குடிநீா் விநியோகிக்கப்படாததால், அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை திருவோணம் மூவா் சாலை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருவோணம் காவல்துறையினா், திருவோணம் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் சாலை மறியல் நடைபெற்ற இடத்துக்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமாா் சுமாா் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com