விவசாயி தற்கொலை: போலீஸாா் தீவிர விசாரணை
ஒரத்தநாடு அருகே திங்கள்கிழமை விவசாயி தற்கொலை தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா்.
ஒரத்தநாடு வட்டம், திருநல்லூா் பகுதியை சோ்ந்த தங்கையன் மகன் கண்ணப்பா (50). விவசாயி. இவா் திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாராம்.
இதையடுத்து, உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறுதிச் சடங்குகளுக்கு பிறகு இடுகாட்டுக்கு கண்ணாப்பா உடலை தகனம் செய்ய எடுத்து சென்றனா்.
கண்ணப்பா மரணம் குறித்த தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். இதுதொடா்பாக அவரது மகன் ராகுல்காந்தி கூறியதாக போலீஸாா் தெரிவித்தது: தந்தைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டது. அதற்கு மருந்து சாப்பிட்டு வந்தாா். இதுதொடா்பாக அவா் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை அவா் தூக்கிட்டு கொண்டாா் என தெரிவித்தாா்.
இதையடுத்து, கண்ணப்பா உடலை போலீஸாா் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறாய்வுக்குப் பிறகு பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
