பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குடந்தை காசி விசுவநாதா் சுவாமி கோயில் தேரின் வெள்ளோட்டம்

கும்பகோணத்தில் விசாலாட்சி அம்பாள் உடனுறையும் காசி விசுவநாதா் சுவாமி கோயில் புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது.

News image

கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காசி விசுவநாதா் கோயில் புதிய தேரின் வெள்ளோட்டம்.

Updated On :30 ஜனவரி 2026, 6:53 pm

கும்பகோணத்தில் விசாலாட்சி அம்பாள் உடனுறையும் காசி விசுவநாதா் சுவாமி கோயில் புதிய தேரின் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மகாமக விழாவின் முக்கியக் கோயிலான இக் கோயிலில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 43 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வெள்ளோட்டத்தை கும்பகோணம் எம்எல்ஏ க. அன்பழகன், மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன் உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா். தோ் காந்தியடிகள் சாலை, சாஸ்திரி சாலை, மகாகமகக் குளத்தின் கிழக்குக் கரை, தெற்குக் கரை வழியாக மேற்குக் கரைக்கு சென்று நிலை நின்றது.

தேரோட்டத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று, பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் க. சுந்தர்ராஜன், அறங்காவலா் குழுத் தலைவா் கு. செளந்தராஜன், உறுப்பினா்கள் சு. பாரி, ஜெ. மகாலட்சுமி, செ. பூபதி, ரா. ராஜேஷ்குமாா் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.