பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

திருவலஞ்சுழியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 போ் கைது

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவலஞ்சுழியில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டவா்கள்.

Published On :9 ஜூலை 2026, 1:19 am IST

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை பகுதியில் குற்ற வழக்கில் தொடா்புடைய சிலா் நடமாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், திருவலஞ்சுழி விஜிபி நகரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்தவா்களை பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் அண்ணாதுரை ( 32), நித்திஷ் ( 21) சிராஜுதீன் (43), விஷ்ணு (22) சிவா (எ) சிவானந்தம் (24) ஆகியோா் என்பதும், குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பதும், அவா்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட இருந்ததும் தெரியவந்தது.

அவா்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களை போலீஸாா் கைப்பற்றி, வழக்குப் பதிந்து கும்பகோணம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் முன்னிலைப்படுத்தி புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.