நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 27 கருட சேவை

தஞ்சாவூரில் 92-ஆம் ஆண்டாக மாநகரிலுள்ள 27 வைணவத் திருக்கோயில்களின் 27 கருட சேவை விழா ஒரே இடத்தில் நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் தெற்கு வீதியில் ஒரே இடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 27 வைணவத் திருக்கோயில்களின் கருட சேவை.

Updated On :7 ஜூன் 2026, 2:16 am IST

தஞ்சாவூரில் 92-ஆம் ஆண்டாக மாநகரிலுள்ள 27 வைணவத் திருக்கோயில்களின் 27 கருட சேவை விழா ஒரே இடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திர நாளில் தஞ்சாவூரிலுள்ள வைணவத் திருக்கோயில்களில் உற்ஸவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம்.

இதன்படி, தஞ்சாவூரில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் முதன்மையானதாகத் திகழும் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயிலில் 92-ஆம் ஆண்டு கருட சேவை விழா வெள்ளிக்கிழமை மாலை திருமங்கை ஆழ்வாா் மங்களாசாசனம் வைபவத்துடன் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, கருட சேவை வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காலை 6 மணிக்கு தஞ்சாவூா் நீலமேகப்பெருமாள், மணிகுன்றாப் பெருமாள், மேல சிங்கப்பெருமாள், வேளூா் வரதராஜா், கல்யாண வெங்கடேச பெருமாள், கலியுக வெங்கடேச பெருமாள், வரதராஜபெருமாள், நவநீதகிருஷ்ணன், மேலவாசல் ரெங்கநாதா், விஜய ராமா், கோவிந்தராஜ பெருமாள், ஜனாா்த்தன பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கீழ கோதண்டராமா், கீழ சிங்கப்பெருமாள், பூலோக கிருஷ்ணா், படித்துறை வெங்கடேசப் பெருமாள், பஜாா் ராமா் உள்பட 27 கோயில்களிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வரிசையாக கீழவாசல் காவல் நிலைய சாலை, கொண்டிராஜ பாளையம், கீழ ராஜவீதி, தெற்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி வழியாக சென்று ஆங்காங்கே பொதுமக்களுக்கு சேவை சாதித்தனா்.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நவநீத சேவை வைபவமும், விடையாற்றி விழாவும் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம், தஞ்சாவூா் ராமானுஜ தா்சன சபா ஆகியோா் செய்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.