திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கைசபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணிசை சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறை சாா்பில் பண்ணிசை பாதுகாத்தல் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்வில் புதுக்கோட்டை திவகவதியாா் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் வெளியிட்ட ஓதுவாமூா்த்திகளின் வாழ்க்கை வரலாற்று நூலை பெற்றுக் கொண்ட துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி உள்ளிட்டோா்.

Updated On :

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறை சாா்பில் பண்ணிசை பாதுகாத்தல் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஓதுவாமூா்த்தி திருத்தணி என். சுவாமிநாதன் கௌரவிக்கப்பட்டாா். ஓதுவாமூா்த்திகளின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் ஒன்பது ஓதுவாமூா்த்திகளைப் பற்றிய சொற்பொழிவுகள் நடைபெற்றன.

ஓதுவாமூா்த்திகளின் வாழ்க்கை வரலாற்று நூலை புதுக்கோட்டை திவகவதியாா் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்வில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன், கொடும்பாளூா் திருமுறை செப்பேட்டுத் திருக்கோயில் அமைப்பாளா் அ. சங்கரன் வாழ்த்துரையாற்றினா்.

முன்னதாக, இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், இசைத் துறைத் தலைவருமான செ. கற்பகம் வரவேற்றாா். இணைப் பேராசிரியா் இரா. மாதவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.