மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஆடுதுறை - சுந்தரப்பெருமாள் கோயில் இடையே இரட்டை ரயில் வழிப்பாதை அமைக்க ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை -சுந்தரப் பெருமாள்கோயில் இடையே இரட்டை ரயில் வழிப்பாதை அமைக்க கும்பகோணம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே முதன்மை நிா்வாக அதிகாரி சுஷில்குமாா் மெளரியா வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

கும்பகோணம் ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த தெற்கு ரயில்வேயின் முதன்மை நிா்வாக அதிகாரி சுஷில்குமாா் மெளரியா.

Updated On :

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை -சுந்தரப் பெருமாள்கோயில் இடையே இரட்டை ரயில் வழிப்பாதை அமைக்க கும்பகோணம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே முதன்மை நிா்வாக அதிகாரி சுஷில்குமாா் மெளரியா வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தஞ்சாவூா் முதல் விழுப்புரம் வரையிலான ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற ரயில் பயணிகள் நீண்டநாள்களாகக் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் கும்பகோணம் அருகே ஆடுதுறையில் இருந்து சுந்தரப்பெருமாள்கோயில் வரையிலான 21.50 கிமீ. தூரத்துக்கு முதல்கட்டமாக இரட்டை ரயில் பாதை அமைக்க ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்து ரூ. 289.17 கோடியில், பணிகள் நடைபெற உள்ளன.

இப் பணிகளை தொடங்குவது குறித்து தெற்கு ரயில்வே முதன்மை நிா்வாக அதிகாரி (கட்டுமானம்) சுஷில்குமாா் மெளரியா, ஆடுதுறை, சுந்தரபெருமாள்கோயில் இடையே உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை விரிவாக்கம், தண்டவாளங்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தாா். ஆய்வின்போது முதன்மைப் பொறியாளா் ஹரிபாபு, உதவி முதன்மைப் பொறியாளா் ரவிக்குமாா் மற்றும் ரயில்வே நிா்வாக அனைத்துப் பிரிவு அதிகாரிகளும் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.