
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 13 ஆவது மண்டலத்துக்குள்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில், அண்ணா பல்கலைக்கழக திருச்சி தொழில்நுட்பப் பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றது.
அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் கழகம் சார்பில் திருச்சி தொழில்நுட்பப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில், மாணவர்கள் பிரிவில் 8 கல்லூரிகளிலிருந்து 48 பேரும், மாணவிகள் பிரிவில் 6 கல்லூரிகளிலிருந்து 36 பேரும் பங்கேற்றனர்.
மாணவர்கள் பிரிவில் 15.5 புள்ளிகள் பெற்று அண்ணா பல்கலைக்கழக திருச்சி தொழில்நுட்பப் பொறியியல் கல்லூரி முதலிடத்தையும், 12.5 புள்ளிகள் பெற்று சாரநாதன் பொறியியல் கல்லூரி இரண்டாவது இடத்தையும், 9 புள்ளிகள் பெற்று எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி மூன்றாவது இடத்தையும், 8 புள்ளிகள் பெற்று ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி நான்காவது இடத்தையும் பிடித்தன.
மாணவிகள் பிரிவில் 9.5 புள்ளிகள் பெற்று அண்ணா பல்கலைக்கழகத் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடத்தையும், 8 புள்ளிகள் பெற்று இந்திராகணேசன் பொறியியல் கல்லூரி இரண்டாவது இடத்தையும், 7 புள்ளிகள் பெற்று சாரநாதன் கல்லூரி மூன்றாவது இடத்தையும், 6 புள்ளிகள் பெற்று எம்.ஐ.இ.டி. கல்லூரி நான்காவது இடத்தையும் பெற்றது.
மாணவ, மாணவிகள் பிரிவில் முதலிடம் பெற்றதன் மூலம், அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும், சாம்பியன் பட்டத்தையும் பாரதிதாசன் தொழில்நுட்பப் பொறியியல் கல்லூரி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





