வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டது! மு.க. ஸ்டாலின்தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பில்லை! மார்க்சிய கம்யூ. அறிவிப்பு! திமுகவினரால் எனக்கு ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது! பேரவைத் தலைவர்

தமிழகத்தில் 1-9 வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் 1-9 வகுப்பு வரையிலான தேர்வுகள் நடைபெறும், ரத்து என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Published On :1 பிப்ரவரி 2024, 2:22 pm IST

தமிழகத்தில் 1-9 வகுப்பு வரையிலான தேர்வுகள் நடைபெறும், ரத்து என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பாப்பாக்குறிச்சி  வரை செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தைத் தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது, "பேருந்து சேவைகள் இல்லாத வழித்தடங்களுக்கும் விரைவில் சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தனியார் பள்ளிகள் தங்களின் வாகனங்களைப் பராமரித்து இயக்க வேண்டும்.

இதனைப் பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்று, ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்த போது அளித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவில் தெரிவித்துள்ளார்.  தற்போது நீட்தேர்வு வரும் ஜீலை 17 ம் தேதி நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பயிற்சி தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்,  நீட் தேர்விலிருந்து விலக்குப்  பெறுவதற்கான சட்டப் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 1-9 வகுப்பு வரையிலான தேர்வுகள் நடைபெறும், ரத்து என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்" என்றார். பேட்டியின் போது முன்னாள்  எம்எல்ஏ., கே.என். சேகரன், மாநகராட்சி துணைமேயர் திவ்யா, கோட்டத்(மண்டலத்) தலைவர் மதிவாணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.