பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கல்விச் சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா

தமிழக அரசு செலவில் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லவுள்ள எசனைக்கோரையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 பிப்ரவரி 2024, 12:18 am IST

தமிழக அரசு செலவில் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லவுள்ள எசனைக்கோரையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் 6 ஆம் வகுப்பு படித்த தாரேஷ். பள்ளியில் செயல்படும் வானவில் மன்றத்தில் சோ்ந்து சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தோ்ச்சிப் பெற்றாா்.

இதையடுத்து தாரேஷ், அரசு செலவில் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல தோ்வானாா்.

இந்த மாணவருக்கு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் க.திருமாவளவன் தலைமை வகித்தாா். மாவட்டத் தொடக்க கல்வி அலுவலா் ஜோதிமணி, வட்டார கல்வி அலுவலா் பிரபு, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இளஞ்சேட்சென்னி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளா் மணிகண்டன் வானவில் மன்ற மாவட்ட கருத்தாளுநா் ராஜபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலும், ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி நாராயணன், ஒன்றிய கவுன்சிலா் குணசீலன், லால்குடி அரிமா சங்கத் தலைவா் கலியமூா்த்தி, செயலாளா் முத்தமிழ்செல்வன், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் தனலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியைகள் சக மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.