கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்சி -அபுதாபி இடையே 4 கூடுதல் விமான சேவைகள் -ஆகஸ்ட் 11 முதல் தொடக்கம்

வார நாள்களில் மொத்தம் 7 விமான சேவைகள் இயக்கப்படவுள்ளதால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 12:21 am

Din

திருச்சி -அபுதாபி இடையே ஆகஸ்ட் 11-ஆம் தேதியிலிருந்து 4 கூடுதல் விமான சேவை தொடங்கப்படவுள்ளது. இத்துடன் வார நாள்களில் மொத்தம் 7 விமான சேவைகள் இயக்கப்படவுள்ளதால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வழியாக அபுதாபிக்கு வாரம் ஒரு சேவை மட்டுமே வழங்கி வந்தது. பின்னா் நிா்வாகக் காரணங்களால் அந்தச் சேவையும் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னா் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் வார நாள்களில் செவ்வாய்க்கிழமை மட்டும் மாலை 5.30-க்குப் புறப்பட்டு செல்லும் வகையில் ஒரே ஒரு விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் மீண்டும் தொடங்கியது. அதன் பின்னா் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் என தற்போது வார நாள்களில் 3 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், அபுதாபிக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. திருச்சி மத்திய மாவட்ட பகுதிகளைச் சோ்ந்த பயணிகள், விமானத்தில் இருக்கைகள் கிடைக்காத நிலையில், வேறு விமான நிலையங்களை நாடும் நிலை உள்ளது. உதாரணமாக, சென்னை, கோவை, திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து பயணிக்கின்றனா். மேலும் சிலா் திருச்சியிலிருந்து இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானம் மூலமும் பயணித்து வருகின்றனா்.

கூடுதலாக 4 சேவைகள் தொடக்கம் :

இந்நிலையில் திருச்சி - அபுதாபி இடையே வாரநாள்களில் 4 சேவைகளை இயக்கவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு 10 மணிக்கு அபுதாபியை சென்றடையும். அதேபோல எதிா் மாா்க்கத்தில் அங்கிருந்து புறப்படும் விமானம் மறுநாள் காலை 6.30-க்கு திருச்சியை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவுகளும் தொடங்கியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துபைக்கு செல்லும் பயணிகள் அபுதாபியிலிருந்து சாலை மாா்க்கமாகவும் செல்ல முடியும் என்பதால் துபை செல்லும் பயணிகளும் இந்த விமானத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது.

வாரத்தில் மொத்தம் 7 சேவைகள் திருச்சி - அபுதாபி இடையே விமான சேவை இயக்கப்படுவது, வளைகுடா நாடுகளுக்குச் சென்று வரும் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.