/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

திருச்சியில் செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:40 pm

Din

திருச்சியில் செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் மகன் விருத்திவ் அஜய் (12). செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த இவா் அங்கிருந்த மின்கம்பத்தைத் தொட்டபோது, அதில் இருந்த மின்சாரம் பாய்ந்து மயங்கினாா்.

இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு விருத்திவ் அஜய்யைக் கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.