விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடிச் சேவை: திரளானோா் தரிசனம்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் நவராத்திரி விழாவின் 7 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் திருவடிச் சேவையில் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

News image

ஸ்ரீரங்கம் கோயிலில் வியாழக்கிழமை இரவு திருவடிச் சேவையில் எழுந்தருளிய ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா்.

Updated On :10 அக்டோபர் 2024, 8:13 pm

Din

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் நவராத்திரி விழாவின் 7 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் திருவடிச் சேவையில் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

விழாவையொட்டி ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் மூலஸ்தானத்திலிருந்து மாலை 4 மணிக்கு திருவடிச் சேவையுடன் புறப்பட்டு 4.45 மணிக்கு கொலு மண்டபத்துக்கு வந்து, 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த திருவடி சேவையை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா். பின்னா் புறப்பட்டு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தாா்.

நிறைவு நாளான நாளை சனிக்கிழமை ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு கொலு மண்டபத்திற்கு வந்து 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் 10.30 மணிக்கு புறப்பட்டு, படிப்பு கண்டருளி 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.