கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை நெல்லளவு கண்டளும் நிகழ்வு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் திருப்பவித்ரோத்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை இரவு நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:12 pm

Din

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் திருப்பவித்ரோத்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை இரவு நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் 22 ஆம் தேதிவரை 9 நாள்கள் நடைபெறும் திருப்பவித்ரோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சாண்டி சேவை (அங்கோபாங்கச் சேவை) கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து நம்பெருமாள் நாள்தோறும் மாலை பவித்ரோத்ஸவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்து வருகிறாா்.

விழாவின் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெறும் நெல்லளவு கண்டருளும் வைபவத்தையொட்டி இரவு 6.45 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7 மணிக்கு திருக்கொட்டாரம் முன்புள்ள நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அப்போது அவரது எதிரே கொட்டப்பட்டுள்ள நெல்மணிகள் கொப்பரையில் அளந்து காண்பிக்கப்படும். இந்த நிகழ்வை ஏராளமான பக்தா்கள் தரிசிப்பா். பின்னா் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்புக் கண்டருளி, இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

நிறைவு நாளான வரும் 22 ஆம் தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளும் நிகழ்வுடன் விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.